Connect with us

உதயம் தியேட்டர் மூடல்.. வேதனையுடன் ட்வீட் போட்ட வைரமுத்து

Vairamuthu_Udhayam_Theatre

Cinema News

உதயம் தியேட்டர் மூடல்.. வேதனையுடன் ட்வீட் போட்ட வைரமுத்து

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வந்த உதயம் தியேட்டர் மூடப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் சோகமான கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சினிமாவை கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்கு பின் என பிரிக்கும் வகையில், தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்கும் மக்களின் கூட்டம் குறைந்து வருகிறது. மேலும், ஸ்மார்ட் போன்களின் ஆதிக்கத்தால், ஓடிடி வரவாலும், பலரும் வீட்டிலேயே திரைப்படங்களை பார்த்துவிட விரும்புகின்றனர்.

இதனால், பல இடங்களிலும் தியேட்டர்களை மூடுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், சென்னையில் கடந்த 1983இல் தொடங்கப்பட்ட உதயம் தியேட்டரை இடித்து விட்டு அங்கு குடியிருப்பு வளாகம் ஒன்று கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்” என சினிமா பாடல்களில் இடம்பெறும் அளவிற்கு பிரபலமான உதயம் தியேட்டர் இடிக்கப்படுவது சினிமா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திரை பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து, உதயம் தியேட்டர் குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு கவிதை வெளியிட்டுள்ளார். அந்த கவிதை பின்வருமாறு:-

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெங்களூரு பந்துகளை கிழித்தெடுத்த தமிழர்கள் சாய் - ஷாருக் - RCB அணிக்கு 201 ரன்கள் இலக்கு..!!!

More in Cinema News

To Top