Connect with us

நடிகர் விஷாலுக்கு மீண்டும் ஒரு தோல்வி படமா ..? – அதிர்ச்சி அளிக்கும் ரத்னம் படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம்

Cinema News

நடிகர் விஷாலுக்கு மீண்டும் ஒரு தோல்வி படமா ..? – அதிர்ச்சி அளிக்கும் ரத்னம் படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம்

ஹரி மற்றும் விஷால் காம்போவில் உருவான ரத்னம் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது இப்படம் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ஆக்சன் படங்களுக்கு பெயர் போன இயக்குநராகவும் நடிகராகவும் விளங்குபவர்கள் ஹரி மற்றும் விஷால்.இவர்கள் இருவருமே தற்போது ஒரே படத்தில் கமிட்டாகி உருவாகியுள்ள உள்ள படம் தான் ரத்னம் .

பிரபல இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்க இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த 26 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சற்று மந்தமான நிலையில் இருக்கும் இப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் வெளிவந்த 4 நாளில் ரூ. 8 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

இதன்காரணமாக நடிகர் விஷாலுக்கு இந்த படமும் தோல்வி படமா என அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர் . நல்ல நடிகன் என்ற பெயரெடுத்துள்ள நடிகர் விஷால் இனி வரும் படங்களில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து மீண்டு கம் பேக் கொடுக்க வேண்டும் என்றும் கருத்து கூறப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இனி வென்றாலும் வீழ்ந்தாலும் பலனில்லை - தொடரில் இருந்து வெளியேறியது லக்னோ - டெல்லி அணிகள்..!!

More in Cinema News

To Top