Connect with us

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தாறுமாறு அப்டேட்..!!

Cinema News

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தாறுமாறு அப்டேட்..!!

பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து சிறப்பான தரமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் – ஷங்கர் ஆகியோரின் காம்போவில் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் இந்தியன் . இதையடுத்து இப்படத்தின் 2 ஆம் பாகம் கடந்த 2019ஆம் ஆண்டு உருவாக ஆரம்பித்தது .

ஆனால் இப்படம் ஆரம்பித்த நாளில் இருந்தே பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் அடுத்தடுத்து தடைபட்டது . ஒருகட்டத்தில் இந்தியன் 2 படம் பெரும்பாலும் கைவிடப்பட்டுவிட்டது என்றே பலராலும் கூறப்பட்டு வந்தது .

இந்நிலையில் பிரச்சனைகள் அனைத்தும் ஓய்ந்து இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. சென்னை, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது .

இந்தியன் படத்திற்கு இசை புயல் இசையமைத்திருந்த நிலையில் இந்தியன் 2 படத்திற்கு நம்ப ராக் ஸ்டார் அனிருத் பட்டாசாக இசையமைத்து வருகிறார்.

கலக்கலாக உருவாகி உள்ள இப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே கமிட்டாகி நடித்திருக்கிறது.

படத்தின் ஷூட்டிங் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் எப்பதான் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது

அதன்படி வரும் மே மாதம் 16-ம் தேதி, நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், சிறப்பு அழைப்பாளராகவும் தெலுங்கு நடிகர் ராம் சரணும் கலந்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வழக்கம்போல் அசத்திய மாணவிகள் - 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..!!

More in Cinema News

To Top