Connect with us

துணிவு பட நடிகர் மாரடைப்பால் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி

Thunivu_Rituraj_Singh

Cinema News

துணிவு பட நடிகர் மாரடைப்பால் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி

அஜித்குமாரின் துணிவு படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகர் ரித்துராஜ் சிங் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

பாலிவுட்டில் சில திரைப்படங்கல் நடித்துள்ள 59 வயதான ரித்துராஜ் சிங், பல்வேறு இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். இவர், கடந்த 2023இல் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

துணிவு படத்தில் சுனில் தத்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த அவர், பின்னர் பாலிவுட் படமான யாரியன் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில், கணையம் பிரச்சினை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதை அவரது நண்பரும் நடிகருமான அமித் பெஹல் உறுதி செய்துள்ளார்.

அவரது மறைவு இந்தி சின்னத்திரை உலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரை பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top