Connect with us

காதலும் கலவரமும் கலந்த அர்ஜுன் தாஸின் ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

Cinema News

காதலும் கலவரமும் கலந்த அர்ஜுன் தாஸின் ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

காந்த குரல் மன்னன் அர்ஜுன் தாஸின் துடிப்பான நடிப்பில் உருவாகி உள்ள ரசவாதி படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் துடிப்பான இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ் . இவரின் குரலுக்கும் மிரட்டலான நடிப்புக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை.

ஆரம்பத்தில் சிறப்பான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.

அந்தவகையில் இவரது நடிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் தான் ரசவாதி. ரொமான்டிக் – ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்க இவர்களுடன் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா உட்பட பலர் நடித்துள்ளனர்.

தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு . சரவணன் இளவரசு, சிவகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

காதலும் கலவரமும் நிறைந்து மாறி மாறி வரும் இந்த ட்ரைலரில் படத்தின் கதை எதைநோக்கி பயணிக்கிறது என்ற யோகம் தென்படவில்லை.

இதோ இந்த ட்ரைலரை பார்த்து உங்களின் கருத்துக்களை கமெண்டில் தெளித்துவிடுங்கள் நண்பர்களே..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பஞ்சாப் அணிக்கு டாட்டா காட்டிய பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!!

More in Cinema News

To Top