Connect with us

பிரபாஸின் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

Cinema News

பிரபாஸின் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கல்கி 2898 ஏடி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது .

இந்திய திரையுலகில் இருக்கும் பேமஸ் ஆன நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ் . இவரது நடிப்பில் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் கல்கி 2898 AD .

நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மிரட்டலான வில்லனாக நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி இவர்களுடன் இந்த படத்தில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்துவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது .

அதன்படி இப்படம் வரும் ஜூன் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே மாதம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட நிகழ்வுகளால் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பத்திர பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்வு - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம்..!!

More in Cinema News

To Top