Connect with us

திரையரங்குகளில் சக்கை போடு போட்ட ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!!

Cinema News

திரையரங்குகளில் சக்கை போடு போட்ட ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!!

திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வந்த ‘Manjummel Boys’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

பொதுவாக மலையாள திரையுலகில் மினிமம் பட்ஜெட் படங்கள் அதிகளவில் வெற்றி படங்களாக உருவெடுக்கும் அந்த வரிசையில் தற்போது Manjummel Boys திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக வலம் வருகிறது.

அனைத்து மொழிகளிலும் பட்டயகிளப்பி வரும் இப்படம் தமிழ் ரசிகர்கள் மனதில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தமிழகத்திலும் சக்கை போடு போட்டது .

இதுமட்டுமின்றி 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம் மலையாள திரையுலகின் ப்ளாக் பஸ்டர் படமாக உருவெடுத்துள்ளது .

இந்நிலையில் இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

அதன்படி இப்படம் மே 5 ஆம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அழகிய போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ்நாட்டில் 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது - இந்த முறையும் மாணவர்களை விட மாணவியர் அதிகளவில் தேர்ச்சி..!!

More in Cinema News

To Top