Connect with us

சிங்கப்பூர் சலூன் ஓடிடி ரிலீஸ் எப்போது..? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Singapore_Saloon_OTT_Release

Cinema News

சிங்கப்பூர் சலூன் ஓடிடி ரிலீஸ் எப்போது..? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படம் திரையரங்குகளில் வரவேற்பை பெறாத நிலையில், ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் படம் கடந்த ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியானது. கோகுல் இதற்கு முன்னதாக, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

சிங்கப்பூர் சலூனில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், லால், மீனாட்சி சௌத்ரி, கிஷன் தாஸ், ஆன் சீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இதனால் படம் மூக்குத்தி அம்மன் போல நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பெரும்பாலான திரையரங்குகளில் கூட்டமே இல்லாமல் காற்று வாங்கியது. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சுமாராகவே போனாலும், படத்தின் வெற்றி விழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய ஆர்ஜே பாலாஜி, இந்த வெற்றி விழா படத்திற்கான கூட்டத்தை அதிகரிக்கத்தான் என்று கூறி இருந்தார்.

இதற்கிடையே படம் சுமாராகவே போனதால், அமேசான், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பிரபல ஓடிடி தளங்கள் படத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை இந்நிலையில், டென்ட்கொட்டாய் எனும் ஓடிடி தளம் படத்தை வாங்கியுள்ளதாகவும், பிப்ரவரி 23 அன்று ஓடிடியில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எனக்கு இந்த மாதிரி மாப்பிள்ளை தான் வேணும் - திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை மிருணாள் தாகூர்..!!

More in Cinema News

To Top