Connect with us

பேட்ட ராப் படத்திற்காக பிரபுதேவாவுடன் குத்தாட்டம் போட்ட சன்னி லியோன்

Petta_Rap_Prabhu_Deva_Sunny_Leone

Cinema News

பேட்ட ராப் படத்திற்காக பிரபுதேவாவுடன் குத்தாட்டம் போட்ட சன்னி லியோன்

பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் பேட்ட ராப் படத்திற்காக நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு அவருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.

நடிகராக இருந்த பிரபுதேவா இயக்குனராக மாறி சில படங்களை எடுத்த பின்னர் தற்போது மீண்டும் முழு மூச்சாக நடிப்பிற்கு திரும்பியுள்ளார். விஜய் முன்னணி வேடத்தில் நடிக்கும் G.O.A.T என்ற மல்டி ஸ்டார் படத்தில் நடித்து வரும் பிரபுதேவா பேட்ட ராப் என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக வேதிகா நடிக்கிறார். மேலும், ரியாஸ்கான், மைம் கோபி, பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தை ப்ளு ஹில் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

பேட்ட ராப் என்பது காதலன் படத்தில் வரும் ஒரு பாடலின் வரியாகும். அதை நினைவுகூரும் வகையில் பேட்ட ராப் என இந்த படத்திற்கு பெயர் வைத்துள்ள நிலையில், ஒரு பாடலுக்கு பிரபுதேவாவுடன் சன்னி லியோனை குத்தாட்டம் போடா வைத்துள்ளனர் படக்குழுவினர்.

இதுகுறித்து பேசிய சன்னி லியோன், தான் பிரபுதேவனின் வேகமான நடன அசைவுகளுக்கு தீவிர ரசிகை என்றும், அவருக்கு நிகராக ஆட சிரமமாக இருந்தாலும், ஒருவழியாக சமாளித்து ஆடியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜாக்கிரதையால் நேர்ந்த சோகம் - பிரபல பாலிவுட் நடிகர் காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு..!!

More in Cinema News

To Top