Connect with us

‘காந்தாரா’ 2ம் பாகத்தில் இணைகிறாரா நடிகர் மோகன் லால்..? வெளியான டக்கர் தகவல்..!!

Cinema News

‘காந்தாரா’ 2ம் பாகத்தில் இணைகிறாரா நடிகர் மோகன் லால்..? வெளியான டக்கர் தகவல்..!!

விரைவில் உருவாக இருக்கும் ‘காந்தாரா’ 2ம் பாகத்தில் நடிகர் மோகன் லால் இணைந்து நடிக்க உள்ளதாக சிறப்பான தரமான தகவல் வெளியாகி உள்ளது.

கன்னட திரையுலகில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காந்தாரா . ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இப்படம் கன்னடத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல மொழிகளில் வெளியாகி தாறுமாறான வெற்றியை பெற்றது.

KGF படத்தை தயாரித்த Hombale Films தயாரிப்பில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ரிஷப் ஷெட்டி தான் இயக்கி நடிக்க போகிறார். இதற்கான அறிவிப்பும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தில் இணைந்து நடிக்க போகும் நடிகர் நடிகைகள் குறித்து எந்த ஒரு விவரமும் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது நடிகர் மோகன்லால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுமட்டுமின்றி பிப். மாதம் முதல் மங்களூரில் இப்படத்திற்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு மே 3ல் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜயகுமாரின் அடுத்த புரட்சி - வெளியானது எலக்சன் படத்தின் ட்ரைலர்..!!

More in Cinema News

To Top