Connect with us

கோடை வெயிலுக்கு குதூகலமாக வெளியானது குரங்கு பெடல் படத்தின் ட்ரைலர்..!!

Cinema News

கோடை வெயிலுக்கு குதூகலமாக வெளியானது குரங்கு பெடல் படத்தின் ட்ரைலர்..!!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி உள்ள குரங்கு பெடல் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சிறந்த தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவரது தயாரிப்பில் வெளியான அணைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வருவதால் லாபகரமான தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

அந்தவகையில் இவரது தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம் தான் குரங்கு பெடல் . கிராமத்து கதைக்களம் கொண்ட இந்த படத்தை கமல்கண்ணன் இயக்க சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் மினிமம் பட்ஜெட் செலவில் இந்த படத்தை தயாரித்துள்ளது .

ஜிப்ரான் இசை அமைக்கும் இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

விளையாட்டு உடல் நலத்தை காக்கும் , விளையாட்டு கொண்டாட்டத்தை தரும் , விளையாட்டு வீட்டுக்கு, நாட்டுக்கு உயிருக்கு நல்லது என்ற வாசகத்துடன் தொடங்கும் இந்த ட்ரைலரை பார்க்கும் போது நமது கடந்த காலம் தான் நினைவுக்கு வருகிறது .

இதோ இந்த ட்ரைலரை பார்த்து உங்கள் நினைவுக்கு என்ன வருகிறது என்பதை எங்களுடன் கமெண்டில் பகிருங்கள் நண்பர்களே…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் எடை சரியான அளவில் இருப்பதை உறுதி செய்திடுக - TTV தினகரன் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top