Connect with us

விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

Cinema News

விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

ஹரி மற்றும் விஷால் காம்போவில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள ரத்னம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ஆக்சன் படங்களுக்கு பெயர் போன இயக்குநராகவும் நடிகராகவும் விளங்குபவர்கள் ஹரி மற்றும் விஷால்.இவர்கள் இருவருமே தற்போது ஒரே படத்தில் கமிட்டாகி உள்ள படம் தான் ரத்னம் .

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் இப்படத்தில் நடித்துள்ளார் . மேலும் இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குநராக சூப்பர் சுப்புராயன் பணியாற்றியுள்ளார் .

மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் நேற்று வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது

இந்நிலையில், ரத்னம் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் வெளிவந்த முதல் நாளில் ரூ. 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top