Connect with us

தொடர் தோல்வியால் அவதிப்படும் விஷால் – அடுத்தப்படத்தில் கைத்தூக்கிவிட ஜோடி சேரும் சூப்பர் ஹிட் இயக்குநர்..!!

Cinema News

தொடர் தோல்வியால் அவதிப்படும் விஷால் – அடுத்தப்படத்தில் கைத்தூக்கிவிட ஜோடி சேரும் சூப்பர் ஹிட் இயக்குநர்..!!

தொடர் தோல்வி படங்களால் சற்று துவண்டுபோய் இருக்கும் நடிகர் விஷாலை கைதூக்கிவிடும் விதமாக சூப்பர் ஹிட் இயக்குநர் விஷாலுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ஆக்சன் நாயகனாக வலம் வ வருபவர் நடிகர் விஷால் . என்னதான் நல்ல நடிகனாக இருந்தாலும் நடிகர் விஷாலுக்கு சமீப கால படங்கள் எதுவும் அந்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

ஆனால் இடையில் வந்த மார்க் ஆண்டனி விஷாலுக்கு சற்று கைகொடுக்க அடுத்து வந்த ரத்தனம் படம் அப்படியே அவரை சறுக்கி விழ வைத்துள்ளது.

Also Read : சிங்கத்தின் கோட்டைக்குள் ஜொலிக்குமா பஞ்சாப்..? – சேப்பாக்கத்தில் இன்று CSK – PBKS பலப்பரீட்சை..!!

ஹரி இயக்கத்தில் விஷால் மற்றும் பிரியா பவனி சங்கர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

நல்ல நடிகன் என்ற பெயரெடுத்துள்ள நடிகர் விஷால் இனி வரும் படங்களில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து மீண்டு கம் பேக் கொடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தோல்வியில். துவண்டுபோய் இருக்கும் நடிகர் விஷாலை கைதூக்கிவிடும் விதமாக சூப்பர் ஹிட் இயக்குநர் விஷாலுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மருது பட வெற்றிக் கூட்டணி முத்தையா மற்றும் விஷால் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  யோகிபாபு நடிப்பில் உருவான ‘போட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Cinema News

To Top