Connect with us

ராகுல் ப்ரீத் சிங் திருமணத்தில் செல்பி, புகைப்படங்கள் எடுக்கத் தடை.. காரணம் இதுதான்

Rahul_Preet_Singh_Marriage

Cinema News

ராகுல் ப்ரீத் சிங் திருமணத்தில் செல்பி, புகைப்படங்கள் எடுக்கத் தடை.. காரணம் இதுதான்

தனது நீண்டநாள் காதலர் ஜாக்கி பக்னானியை நாளை ராகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்ய உள்ள நிலையில், அவரது திருமணத்தில் புகைப்படங்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாபை சேர்ந்த ராகுல் ப்ரீத் சிங் மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு அறிமுகமானார். 2009இல் 7ஜி ரெயினபோ காலனியின் கன்னட ரீமேக்கான கில்லி அவரது முதல் படமாகும். அதில் சோனியா அகர்வால் வேடத்தில் நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்த ராகுல் ப்ரீத் சிங்கிற்கு தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் ஸ்பைடர் படங்கள் நல்ல அடையாளத்தைப் பெற்றுக்கொடுத்தது. இதைத் தொடர்ந்து 2014இல் யாரியன் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் ஜாக்கி பக்னானியுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை நீண்ட காலமாக காதலித்து வந்தார். பக்னானி கொல்கத்தாவைச் சேர்ந்தவர் மற்றும் நடிப்பில் பெரிய அளவில் சோபிக்க முடியாவிட்டாலும், தற்போது பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

இந்நிலையில், இவர்களுடைய திருமணம் நாளை கோவாவில் உள்ள ஐடிசி ரிசார்ட்டில் நடக்கிறது. இதற்காக முன்னணி நடிகர்கள், தொழிலபதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் அழைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் பாதுகாப்பு கருதி நிகழ்வில் புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தங்கள் திருமண நிகழ்வை மீடியாக்களிடம் விற்று வருமானம் ஈட்டுவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மீடியாக்களிடம் விலை குறித்து பேசி வருவதாகவும் பேச்சு அடிபடுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சென்னை டென்னிஸ் மைதானத்தில் விஜய் அமிர்தராஜ் பெயரில் பெவிலியன்..!!

More in Cinema News

To Top