Connect with us

தோனி அடித்த ஹார்டிக் சிக்ஸர்களால் அதிர்ந்த மைதானம் – மும்பை அணிக்கு 207 ரன்கள் இலக்கு..!!

Featured

தோனி அடித்த ஹார்டிக் சிக்ஸர்களால் அதிர்ந்த மைதானம் – மும்பை அணிக்கு 207 ரன்கள் இலக்கு..!!

ரசிகர்களின் அமோக ஆதரவுடன் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் மும்பையில் உள்ள உலக புகழ் பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் CSK – MI அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரஹானே களமிறங்கினர் . இதில் மாற்றத்தை கொண்டு வருவார் என்று முதலில் களமிறங்கப்பட்ட ரஹானே 5 ரன்களில் அட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார் .

மறுபுறம் அதிரடியில் மிரட்டிய ருதுராஜ் தாறுமாறான ரன் குவிப்பில் ஈடுபட்டார் . மறுபக்கம் ஆடிய ரச்சின் 21 ரன்களில் வெளியேற அடுத்து வந்த டுபேவுடன் கேப்டன் ருதுராஜ் கைகோர்த்தார் . சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த இவர்கள் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர் .

பின்னர் கடைசி ஓவரில் களத்திற்கு வந்த தோனி வந்த வேகத்தில் 3 சிறப்பான தரமான ஹார்டிக் சிக்ஸர்களை அடித்து சென்னை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 206 ரன்களை குவித்தது . இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது .

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top