Connect with us

தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது..!!!

Cinema News

தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது..!!!

தனுஷ் இயக்கி நடிக்க உள்ள ராயன் படத்தில் இருந்து முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது .

நடிகர் தனுஷ் தனது 50 ஆவது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியான நாள் முதல் இப்படம் குறித்து அவரது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது .

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது .

இப்படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் , செல்வராகவன் , எஸ்.ஜே.சூர்யா,அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்துவந்த தற்போது ராயன் படக்குழு ஒரு சிறப்பான அப்டேட்டை வெளியிட்டுள்ளது .

அதன்படி தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள பட நிறுவனம். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சேப்பாக்கத்தில் CSK அணிக்கு எதிராக டாஸ் வென்ற SRH பந்துவீச முடிவு - கடின இலக்கை கொடுக்குமா CSK..?

More in Cinema News

To Top