Connect with us

தேசிய திரைப்பட விருதுகளின் பெயர் மாற்றம்.. சர்ச்சையை ஏற்படுத்திய மத்திய அரசின் அறிவிப்பு

Nargis_Dutt_Indira_Gandhi

Cinema News

தேசிய திரைப்பட விருதுகளின் பெயர் மாற்றம்.. சர்ச்சையை ஏற்படுத்திய மத்திய அரசின் அறிவிப்பு

தேசிய திரைப்பட விருதுகளில் இந்திரா காந்தி விருது மற்றும் நர்கிஸ் தத் விருதுகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் திரைப்படைத் துறையை ஊக்குவிக்கும் வகையில் 1954 முதல் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் 1965 முதல் தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த படத்திற்கு நர்கிஸ் தத் விருதும், 1984 முதல் சிறந்த அறிமுக இயக்குனருக்கு இந்திராகாந்தி விருதும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டு வழங்கப்பட உள்ள 70வது தேசிய திரைப்பட விருதுகளில் இந்த இரு விருதுகளின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. நர்கிஸ் தத் ஒரு சிறந்த நடிகை மட்டுமல்லாது சமூக சேவகியும் ஆவார். அவர் பஞ்சாபி அப்துல் ரஷீத்தின் மகள் ஆவார்.

அப்துல் ரஷீத் மோகன்சந்த் உத்தம்சந்த் தியாகி என்ற இந்துவாக பிறந்து பின்னர் மதம் மாறியவர் ஆவார் நர்கிஸ் தத்தின் தாய் ஜத்தன்பாய் ஹுசைனின் பெற்றோர்களும் கூட இந்துவாக பிறந்து பின்னர் மதம் மாறியவர்களே.

மேலும், நர்கிஸ் தத் சுனில் தத்தை திருமணம் செய்துகொண்டு இந்துவாக மதம் மாறினார். இதனால் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலான படங்களுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டது.

இந்திரா காந்தியின் பெயர் நீக்கம் என்பதை அரசியல் ரீதியாக எடுத்துக் கொண்டாலும், நர்கிஸ் தத்தின் பெயர் நீக்கம் ஏன் என்ற கேள்வி திரைத்துறையில் எழுந்துள்ளது.

இதற்கிடையே, தேசிய திரைப்பட விருதுகளை வெல்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுத் தொகை இந்த ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இணையத்தை கலக்கும் நடிகர் சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் ட்ரெய்லர்..!!

More in Cinema News

To Top