Connect with us

உறியடி விஜய் குமார் நடித்துள்ள ‘எலக்சன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

Cinema News

உறியடி விஜய் குமார் நடித்துள்ள ‘எலக்சன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் புதிய படமான ‘எலக்சன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது .

தமிழ் சினிமாவில் உறியடி என்ற படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் படு பேமஸ் ஆனவர் தான் நடிகர் விஜய்குமார்.

நடிப்பு இயக்கம் என இரண்டிலும் தனது முழு உழைப்பை அயராது கொடுத்து வரும் இவரது இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக மாறாமல் இருப்பது சற்று வருத்தம் தான்.

பின்னர் நீண்ட காலம் திரையில் காண முடியாமல் இருந்த விஜயகுமார் இயக்குநர் லோகேஷ் தயாரிப்பில் உருவான Fight Club படத்தின் மூலம் கெத்தான என்ட்ரி கொடுத்தார் . ஏராளமான ஆக்சன் காட்சிகளுடன் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவரது நடிப்பில் தமிழ் இயக்கத்தில் எலக்சன் என்ற புதிய படம் உருவாகி வருகிறது . ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட் கேட்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி கோவிந்த் வசந்த் இசையமைப்பில் தமிழ் இயக்கத்தில், விஜய் குமார் நடித்துள்ள ‘எலக்சன்’ திரைப்படம் மே 17ம் தேதி வெளியாகும் என அழகிய போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top