Connect with us

தனுஷின் D50 வெளியாவதில் மீண்டும் தாமதம்…? காரணம் இதுதான்

Dhanush_D50_Movie

Cinema News

தனுஷின் D50 வெளியாவதில் மீண்டும் தாமதம்…? காரணம் இதுதான்

தனுஷ் இயக்கி நடிக்கும் D50 படம் ஏப்ரல் 12 அன்று வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகர் தனுஷ், பவர் பாண்டி என்ற படத்தின் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் இளம் வயது ராஜ்கிரண் வேடத்திலும் தனுஷ் நடித்திருந்த நிலையில், படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் தொடர்ந்து இயக்கத்திலும் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்கத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு மீண்டும் நடிப்பில் பிஸியானார். இந்நிலையில், கடந்த 2023 ஜனவரியில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் தானே இயக்கி நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

இதர படங்களில் அவர் நடித்து வரும் நிலையில், D50 என பெயரிடப்பட்ட இந்த படத்திலும் கவனம் செலுத்தி வந்த தனுஷ், மிக குறுகிய காலத்தில் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இந்நிலையில், தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

படத்தை ஏப்ரல் 12ஆம் தேதி வெளியிடுவதற்காக படக்குழு தீயாய் உழைத்து வந்த நிலையில், அது தேர்தல் சமயம் என்பதால் படத்தை தேர்தல் முடிந்து மத்தியில் புதிய அரசு பதவியேற்ற பிறகு வெளியிடலாம் என தனுஷ் தயாரிப்பு தரப்பிடம் கூறியதாகத் தெரிகிறது.

தனுஷ் கூறியதில் உள்ள காரணத்தை புரிந்துகொண்ட தயாரிப்பு தரப்பும், படத்தை மே மாதத்திற்கு பிறகே வெளியிடலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  லக்னோவை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்துமா ராஜஸ்தான்..? டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..?

More in Cinema News

To Top