Connect with us

நடிகர் சங்க கட்டடப் பணிக்கு நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி..!!!

Cinema News

நடிகர் சங்க கட்டடப் பணிக்கு நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி..!!!

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப் பணிக்காக நடிகரும் தொழிலதிபருமான நெப்போலியன் ரூ.1 கோடி நிதி வழங்கி உள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தக் கட்டடம் வேண்டும் என்பதற்காக நடிகர் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில், நடிகர் சங்க கட்டடப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வைப்பு நிதிக்காக, தனது சொந்த நிதியிலிருந்து, ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க நிர்வாகிகளிடம் இன்று நடிகரும் தொழிலதிபருமான நெப்போலியன் வழங்கியுள்ளார் .

தமிழ்நாட்டு திரைக் கலைஞர்களின் பல நாள் கனவாக இருந்து வந்த தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப்பணியை விரைந்து நிறைவு செய்ய திரை பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிதியினை தொடர்ந்து வழங்கி வரும் நிலையில் தற்போது நடிகர் சங்க கட்டடப் பணிகள் தீர்த்தமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன் நடிகரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் , உலகநாயகன் கமல்ஹாசன் , விஜய் , சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கோடிக்கணக்கில் நிதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரியங்கா மோகனின் பிறந்தநாளில் ‘AGS 29’ படக்குழு வெளியிட்ட பிரெய்லி போஸ்டர்: கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top