Connect with us

பிரபல நடிகருடன் நடிக்க மறுப்பு.. முத்தக் காட்சியால் நோ சொன்ன கீர்த்தி சுரேஷ்

Keerthy_Suresh

Cinema News

பிரபல நடிகருடன் நடிக்க மறுப்பு.. முத்தக் காட்சியால் நோ சொன்ன கீர்த்தி சுரேஷ்

முத்தக் காட்சி இருப்பதால் பிரபல நடிகர் நடிக்கும் படத்தின் கதாநாயகியாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக சில மலையாளப் படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் 2013இல் மலையாளத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2015இல் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழிலும், 2016இல் நேனு சைலஜா என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.

அதன் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து தேசிய விருதும் வாங்கினார்.

தமிழில் கிளாமர் மற்றும் முத்தக்காட்சிகளை தவிர்த்து வந்தாலும், தெலுங்கில் சற்று தாராளமாகவே நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது அங்கும் முத்தக்காட்சியில்நடிப்பதையும், கிளாமர் ரோல்களை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தெலுங்கில் நடிகர் நிதின் உடன் நடிக்க வந்த ஒரு வாய்ப்பை அவர் மறுத்துவிட்டார். இதற்கான காரணம் குறித்து பலரும் பலவிதமாக பேச, தற்போது கீர்த்தி சுரேஷ் என்ன காரணம் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதாவது நிதினுடன் நடிப்பதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், ஆனால், படத்தில் முத்தக்காட்சிகள் இருப்பதால் மட்டுமே தவிர்த்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "அடி தூள்" தெலுங்கில் ரீமேக் ஆகும் சூரியின் ‘கருடன்’..!!

More in Cinema News

To Top