Connect with us

கடைசி படத்தை இவரை நம்பி ஒப்படைக்கும் நடிகர் விஜய்… யார் இந்த இயக்குனர்?

Thalapathy_Vijay

Cinema News

கடைசி படத்தை இவரை நம்பி ஒப்படைக்கும் நடிகர் விஜய்… யார் இந்த இயக்குனர்?

நடிகர் விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்தின் இயக்குனராக தெலுங்கு இயக்குனர் ஒருவரை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T என பெயரிடப்பட்டுள்ள தனது 68வது படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

மேலும், 2026 சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என்றும், தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துக் கொண்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதனால் தளபதி 69 அவரது சினிமா கேரியரில் கடைசி படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தை யார் இயக்குவார்கள் என்ற கேள்வி தொடர்ந்து இருந்து வரும் நிலையில், வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ் பெயர்கள் அடிபட்டன. ஆனால் அவர்கள் இருவரும் இல்லை என தற்போது கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமாவில் மகேஷ் பாபுவை வைத்து குண்டூர் காரம் என்ற பெயரில் ஹிட் படம் கொடுத்த திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் தான் விஜயின் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கமர்ஷியல் ஹிட் கொடுப்பதற்கு பெயர்போனவர் என்பதால், அவரை நம்பி களமிறங்கும் முடிவில் விஜய் உள்ளதாகவும் தெரிகிறது.

இது உறுதியானால், தெலுங்கு இயக்குனர் இயக்கிய வாரிசு படம் போல் ஆகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்குமாறு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தோல்விக்கு கிடைத்த பரிசு : மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ₹24 லட்சம் அபராதம் விதித்தது பிசிசிஐ..!!!

More in Cinema News

To Top