Connect with us

வடிவேலு இப்படிப்பட்ட மனிதரா..? பகீர் தகவலை வெளியிட்ட நடிகை ஆர்த்தி

Aarthi_ganesh_Vadivelu

Cinema News

வடிவேலு இப்படிப்பட்ட மனிதரா..? பகீர் தகவலை வெளியிட்ட நடிகை ஆர்த்தி

நடிகர் வடிவேலு துணை நடிகர்களை நடத்தும் விதம் மிக மோசமாக இருக்கும் என பலர் அவ்வவ்போது கூறி வரும் நிலையில், தற்போது ஆர்த்தியும் அதே கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் காலத்திற்கு பிறகு வடிவேலு நகைச்சுவை ஜாம்பவானாக வலம் வந்தார். எனினும், 2011இல் விஜயகாந்துக்கு எதிராக திமுக மேடைகளில் அவர் பேசிய விதம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே அவரை சினிமாவில் இருந்து விலக்கி வைத்தது. நீண்ட வனவாசத்திற்கு பிறகு அவர் மீண்டும் நடிக்கும் வந்தாலும், எந்த படமும் முந்தைய அளவிற்கு ஓடவில்லை. எனினும், மாமன்னன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து சிறப்பான கம்பேக் கொடுத்தார்.

இதனால், தொடர்ச்சியாக படங்கள் வரும் என அவர் எதிர்பார்த்தாலும், பெரிய அளவில் படங்கள் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை ஆர்த்தி சித்ரா ராமகிருஷ்ணனுக்கு அளித்த ஒரு பேட்டியில், நடிகர் வடிவேலு தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் தன்னைவிட சிறப்பாக நடித்தால், அவர்களது பகுதிகளை படத்தில் இருந்து வெட்டி விடுவார் என்று கூறியுள்ளார்.

மேலும், தன்னுடைய கணவர் கணேஷை படத்தில் நடிக்க அழைத்து மேக்கப் போட்ட பிறகு சீன் இல்லை எனக் கூறி அனுப்பியது போன்ற செயல்களில் எல்லாம் ஈடுபட்டுள்ளார் எனக் கூறினார். வடிவேலுவுடன் நடித்த பல துணை நடிகர்களும் ஏற்கனவே இதுபோன்ற கருத்துக்களை கூறியிருந்த நிலையில், ஆர்த்தியும் அதையே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காதலும் கலவரமும் கலந்த அர்ஜுன் தாஸின் ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Cinema News

To Top