Connect with us

மேஜர் முகுந்தன் வரதராஜனின் நினைவிடத்தில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அஞ்சலி – வைரல் போட்டோ..!!

Cinema News

மேஜர் முகுந்தன் வரதராஜனின் நினைவிடத்தில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அஞ்சலி – வைரல் போட்டோ..!!

மேஜர் முகுந்தன் வரதராஜனின் வாழக்கை வரலாறை மையமாக வைத்து அமரன் படம் உருவாகி வரும் நிலையில் இன்று அப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மேஜர் முகுந்தன் வரதராஜனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உள்ள புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகிறது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் அமரன்

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார் . இதுமட்டுமின்றி இந்த படத்தில் எஸ்.கே மற்றும் சாய் பல்லவியுடன் சேர்ந்து ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீஸர் கடந்த சில சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது . ராணுவ வீரராக மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள சிவகார்த்திகேயனின் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் செம ஆவலாக உள்ளனர் .

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலால் வீரமரணமடைந்த சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படம் உருவாகி உள்ளது .

இந்நிலையில் இன்று மேஜர் முகுந்தன் வரதராஜனின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார் .

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி செம் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டெல்லியை வச்சு செய்த கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!!

More in Cinema News

To Top