Connect with us

சிவகார்த்திகேயன் படத்திற்கு எதிரான போராட்டம் வாபஸ்.. பின்னணியில் நடந்தது என்ன?

Sivakarthikeyan_AR_Murugadoss

Cinema News

சிவகார்த்திகேயன் படத்திற்கு எதிரான போராட்டம் வாபஸ்.. பின்னணியில் நடந்தது என்ன?

சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்..முருகதாஸ் இணையும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவுட்டோர் யூனிட் சங்கம் போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயலான் படத்தை முடித்த பின்னர், நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம் படத்திற்கான பூஜை கடந்த பிப்ரவரி 14இல் சென்னையில் நடந்தது. இந்த படத்தின் கதாநாயகியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார்.

மேலும், அனிருத் படத்திற்கு இசையமைக்க, ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீ லட்சுமி மூவிஸ் படத்தை தயாரிக்கிறது. பூஜை முடிந்த உடன் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு அவுட்டோர் யூனிட் சங்கம் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

படத்தயாரிப்பு நிறுவனம் தமிழக அவுட்டோர் யூனிட்களை பயன்படுத்தாமல் ஆந்திராவில் இருந்து ஆட்களையும் படக்கருவிகளையும் கொண்டு வந்ததுதான் எதிர்ப்புக்கு காரணமாகும். எனினும், தமிழக அவுட்டோர் யூனிட்களின் போராட்டத்தை புறம்தள்ளி படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது.

இந்நிலையில், போராட்டம் நடத்திய அவுட்டோர் யூனிட் சங்கத்தினர் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள அவுட்டோர் யூனிட்டை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பின்னர் பயன்படுத்திக்கொள்ள படக்குழு ஒப்புக்கொண்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சஞ்சய்யின் படப்பிடிப்புக்கு அஜித்தின் ஆதரவு!

More in Cinema News

To Top