Connect with us

CWC2023 : ஒரே ஆட்டத்தில் பல சாதனைகளை படைத்த இந்திய அணி..!! ரோஹித் மட்டும் இத்தனை சாதனை படைத்தாரா..

CWC23

CWC2023 : ஒரே ஆட்டத்தில் பல சாதனைகளை படைத்த இந்திய அணி..!! ரோஹித் மட்டும் இத்தனை சாதனை படைத்தாரா..

இந்தியாவில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் படுஜோராக நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை அசால்டாக வீழ்த்திய இந்திய அணி பல புத்தம் புதிய சாதனைகளையும் படைத்துள்ளது.

பெங்களூரில் உள்ள பிரபல சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்திய மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் . பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் பிரமாதமாக விளையாடிய இந்திய அணி அபார வெற்றி பெற்றதுடன் பல அசத்தலான சாதனைகளையும் படைத்துள்ளது.

ஒரே போட்டியில் இந்திய அணி நிகழ்த்திய சாதனைகள் மற்றும் சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ உங்களுக்காக :

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ், கே.எல்.ராகுல் ஆகிய 5 தொடக்க வீரர்களும் அரை சதம் விளாசி புதிய சாதனை படைத்தனர்.

50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் முதல்முறையாக, முதல் 5 பேட்டர்களும் அரை சதம் விளாசி உள்ளனர். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இது 3வது நிகழ்வு ஆகும். (AUS vs IND, Jaipur, 2013 AUS vs IND, Sydney, 2020)

நடப்பு உலககோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி!
டி காக் – 591
ரச்சின் – 565
ரோஹித் – 503

நடப்பாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 2,000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் சுட்டி பையன் சுப்மன் கில்

உலககோப்பை தொடரில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்தார் கே.எல்.ராகுல் . பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 60 பந்துகளில் 102 ரன்கள் விளாசினார் .

50 ஓவர் உலககோப்பையில் நேற்று நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர்.

உலககோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் பந்துவீசிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சுப்மன் கில் , விராட் கோலி . ரோஹித் , சூர்யகுமார் இதில் விராட் கோலி மற்றும் ரோஹித் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர் .

நேற்று நடைபெற்ற ஒரே ஆட்டத்தில் ரோஹித் சர்மா நிகழ்த்திய சாதனைகள் :

ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய கேப்டன் என்ற சாதனையை படைத்தார் ஹிட் மேன் ரோஹித் ஷர்மா 24 , மோர்கன் – 22 (2019) டிவில்லியர்ஸ் 21 (2015)

See also  நடிகர் சங்க கட்டடப் பணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதி உதவி..!!!

சர்வதேச ஒருநாள் போட்டிகளில், ஒரு ஆண்டில் மட்டும் 59* சிக்ஸர்கள் பறக்கவிட்டு, அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா , டி வில்லியர்ஸ் – 58 (2015) , கெயில் – 56 (2019)

சர்வதேச போட்டிகளில் ஓப்பனராக களமிறங்கி 14,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா.

உலககோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில், 5 பந்துகள் மட்டுமே வீசி 1 விக்கெட் கைப்பற்றினார் கேப்டன் ரோஹித் ஷர்மா.

சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100வது அரை சதத்தை பூர்த்தி செய்தார் ரோஹித் ஷர்மா.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஒரே போட்டியில் சிறப்பாக ஆடி வரும் இந்திய அணி பல புத்தம் புதிய சாதனைகளை படைத்துள்ளதற்கு நாட்டு மக்களும் , கிரிக்கெட் ரசிகர்களும் , அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டிகளில் எந்த அணி வென்று இறுதி போட்டிக்கு முன்னேற போகிறது எந்த அணி தொடரில் இருந்து வெளியேற போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in CWC23

To Top