Connect with us

“இந்தியா தோல்விக்கு பின் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து முகமது ஷமி பகிர்வு!”

CWC23

“இந்தியா தோல்விக்கு பின் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து முகமது ஷமி பகிர்வு!”

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறாவது முறையாக ICC உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் இந்திய அணி வெற்றியைப் பெறும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

12 ஆண்டுகள் பிறகு கோப்பையை வென்று ரசிகர்களுக்கு சமர்ப்பிர்க்கலாம் என நினைத்த இந்திய வீரர்களுக்கும் நேற்றைய இரவு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் நேரில் கண்டு களித்த பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணி தோல்வி அடைந்தவுடன் யாருமே எதிர்பாராத வகையில் வீரர்கள் உடை மாற்றும் அறைக்கு சென்று வீரர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.

அப்போது இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முகமது சமியை பிரதமர் மோடி கட்டி அணைத்து ஆறுதல் கூறிய நிகழ்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஏற்கனவே சந்திராயன் 2 தோல்வி அடைந்தபோது இதே போல் பிரதமர் மோடி அங்கிருந்து விஞ்ஞானிகளை கட்டி அணைத்து ஆறுதல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரதமர் மோடி வீரர்கள் அறைக்கு வந்தது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜடேஜா, எங்களுக்கு இந்த தொடர் மிக சிறப்பாக அமைந்திருந்தது.

ஆனால் நேற்று எங்களால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் எங்கள் இதயம் சுக்கு நூறாக உடைந்து இருந்தது இருப்பினும் நீங்கள் கொடுத்த ஆதரவு தான் எங்களை இன்னும் உழைக்க வைக்கிறது என்று கூறியிருந்தார். இதைப் போன்று பிரதமர் மோடி நேற்று வீரர்கள் உடைமாற்றும் அறைக்கு வந்து எங்களை சந்தித்து உற்சாகப்படுத்தியதாகவும் அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஜடேஜா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை தடுக்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்..!!

More in CWC23

To Top