Connect with us

இந்திய அணிக்கான தேர்வில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன் – வலைதளங்களில் ரசிகர்கள் ஆதங்கம்

CWC23

இந்திய அணிக்கான தேர்வில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன் – வலைதளங்களில் ரசிகர்கள் ஆதங்கம்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியவில் நடைபெறும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 23ம் தேதி தொடங்கி டிசம்பர் 3ம் தேதி வரை விசாக், திருவனந்தபுரம், கவுகாத்தி, ராய்பூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டி20 தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது .

சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி : சூர்யகுமார் (கேப்டன்), ருதுராஜ் (து.கேப்டன்), இஷான் கிஷான், ஜெய்ஷ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ், சுந்தர், அக்ஸர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப், ப்ரஷித், ஆவேஷ் கான், முகேஷ் குமார் . கடைசி 2 போட்டிகளில் மட்டும் ஷ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டி20 தொடரில் இந்திய அணியில், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது பெரும் பேச்சு பொருளாக வலம் வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவால் சஞ்சு சாம்சன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர் .

உலக கோப்பை தொடருக்கு பின் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரர்களை கொண்ட அணியில் சஞ்சு சாம்சனுக்கு ஏன் இடம் கொடுக்கவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெங்களூரு பந்துகளை கிழித்தெடுத்த தமிழர்கள் சாய் - ஷாருக் - RCB அணிக்கு 201 ரன்கள் இலக்கு..!!!

More in CWC23

To Top