Connect with us

அற்ப காரணங்களை சொல்லி தப்பிக்க விரும்பவில்லை – தோல்வி குறித்து கேப்டன் ரோகித் உருக்கம்…

CWC23

அற்ப காரணங்களை சொல்லி தப்பிக்க விரும்பவில்லை – தோல்வி குறித்து கேப்டன் ரோகித் உருக்கம்…

உலககோப்பை இறுதி போட்டியில் தோல்வியடைந்தது குறித்து அற்ப காரணங்களை சொல்லி தப்பிக்க விம்பவில்லை எங்கள் தோல்விக்கு எண்களின் மோசமான விளையாட்டே காரணம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஏரளாமான ரசிகர்களுடன் நேற்று விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்றது.

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சற்று மந்தமாக ஆடியதால் 240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது . இதையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அபாரமாக ஆடி 6 வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.

இந்நிலையில் உலககோப்பை இறுதி போட்டியில் தோல்வியடைந்தது குறித்து உருக்கமாக பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது :

இன்றைய நாள் எங்களுக்கு சாதகமாக இல்லை, நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. எல்லா வகையிலும் முயற்சி செய்து பார்த்துவிட்டோம். ஆனால் எதுவும் எங்கள் பக்கம் அமையவில்லை.

விராட் மற்றும் ராகுல் நன்றாக ஆடினார்கள், இலக்காக 270 முதல் 280 ரன்கள் அடிப்போம் என எதிர்பார்த்தோம். நிச்சயம் இன்னும் 20, 30 ரன்கள் சேர்த்து அடித்திருக்க வேண்டும்.

240 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கும் போது விக்கெட்டுகளை வேகமாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் அது எங்களால் முடியவில்லை . எங்கள் தோல்விக்கு எந்த காரணத்தையும் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை.

டிராவிஸ் ஹெட், மார்னஸ் லவுஷேன் நன்றாக ஆடினார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் ஆடுவது சுலபம் தான் ஆனால் நாங்கள் அதிகமாக ரன்கள் அடிக்கவில்லை எங்கள் தோல்விக்கு எங்களை சுமாரான ஆட்டமே காரணம் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in CWC23

Advertisement
 

Trending

 
Advertisement
To Top