Connect with us

நீ ஜெயிச்சிட்ட மாறா – டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார் அஸ்வின்

Featured

நீ ஜெயிச்சிட்ட மாறா – டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார் அஸ்வின்

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது இதுவரை இருக்கும் நிலவரத்தை படி இந்திய – இங்கிலாந்து 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜாக் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 500 விக்கெட் சாதனையை இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் எட்டினார்.

வெறும் 98 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ள அஸ்வின் குறைந்த பந்துகளை (25,714) வீசி 500 விக்கெட்களை கைப்பற்றி அபார சாதனை படைத்துள்ளார் .

போட்டிக்கு பின் இந்த சாதனை குறித்து பேசிய அஸ்வின் கூறியதாவது :

இந்த சாதனையை என் அப்பாவுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். அனைத்து நேரத்திலும் என்னுடன் அவர் இருந்துள்ளார். நான் பேட்ஸ்மேனாக மட்டுமே இருக்க விரும்பினேன். ஆனால், எதிர்பாராத விதமாக சுழற்பந்து வீச்சாளர் ஆனேன்.

இந்த சாதனை எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்னால் முடிந்த வரை நல்ல கிரிக்கெட் ஆட விரும்புகிறேன்.

இந்தப் போட்டியை இங்கிலாந்து டி20/ஒருநாள் போட்டி போல அணுகுகிறது. ஆனால், நாங்கள் எங்களது திட்டத்தில் உறுதியாக இருக்கிறோம். அது எங்களுக்கு கைகொடுக்கும் என நம்புகிறோம் என அஸ்வின் தெரிவித்துள்ளார் தெரிவித்தார்.

மேலும் அஸ்வின் படைத்துள்ள இந்த அபார சாதனைக்கு திரை பிரபலங்கள் இந்நாள் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் உயிரிழப்பு - நாமக்கல்லில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

More in Featured

To Top