Connect with us

ஒரே நாளில் நான்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி

Indian_Cricket_Team

Featured

ஒரே நாளில் நான்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி

2023-24 ரஞ்சி டிராபியின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒரே நாளில் நான்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மூத்த உள்நாட்டு கிரிக்கெட் வீரரான சவுரப் திவாரி, ரஞ்சி டிராபியில் ஜார்கண்ட் அணிக்காக தனது கடைசி ஆட்டத்தில் விளையாடிய பிறகு, நேற்று பிட்சை முத்தமிட்டு விளையாட்டிலிருந்து விடைபெற்றார். இடது கை பேட்ஸ்மேனான அவர் இந்தியாவுக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

2008 உலகக் கோப்பையை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய யு19 அணியின் ஒரு பகுதியாகவும் இருந்தார்.

2023-24 ரஞ்சி டிராபி சீசனில் ஜார்க்கண்ட் அணியில் சவுரப் திவாரியுடன் இணைந்து விளையாடிய வருண் ஆரோனும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதே நேரத்தில் பெங்கால் அணியின் கேப்டன் மனோஜ் திவாரியும், விதர்பா அணியின் முன்னாள் கேப்டன் ஃபைஸ் ஃபசல் ஆகியோரும் தங்கள் அணிகளுக்கான கடைசி லீக் ஆட்டத்திற்கு பிறகு ஓய்வு பெற்றனர்.

இதில் குறிப்பாக, ஃபைஸ் ஃபசல் இந்திய அணிக்காக ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடி 54 ரன்கள் (நாட் அவுட்) எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top