Connect with us

இத்தனை விரைவாக சென்றது ஏன் சித்தப்பா – டேனியல் பாலாஜியின் மறைவுக்கு நடிகர் அதர்வா இரங்கல்

Cinema News

இத்தனை விரைவாக சென்றது ஏன் சித்தப்பா – டேனியல் பாலாஜியின் மறைவுக்கு நடிகர் அதர்வா இரங்கல்

தமிழ் சினிமாவில் பிரபல குணசித்ர நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜியின் மறைவுக்கு நடிகரும் டேனியல் பாலாஜியின் உறவினருமான அதர்வா உருமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை நடிகராக கலைத்துறையில் கால்பதித்து வெள்ளித்திரையில் மக்கள் மனதில் நின்ற குணசித்ர நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் டேனியல் பாலாஜி.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களின் கவனம் ஈர்த்த டேனியல் பாலாஜி அதன் பின் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கொடூர வில்லனாக நடித்து பெயரையும் புகழையும் பெற்றார்.

இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்க ரசிகர்கள் கொண்டாடும் சிறந்த குணசித்ர நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் இருந்த டேனியல் பாலாஜிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.பின்னர் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்தபோது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

48 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள டேனியல் பாலாஜியின் மறைவு அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் தற்போது நடிகரும் டேனியல் பாலாஜியின் உறவினருமான அதர்வா உருமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து X தள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் அதர்வா கூறிருப்பதாவது :

வாழ்வில் நமக்கானவர்கள்தான் மிகவும் முக்கியம் என நினைக்கவைத்த மற்றொரு நாள் இது. இன்னும் அதிக நேரம் நாம் ஒன்றாக செலவிட்டிருக்கலாம் என தோன்றுகிறது… Rest In Peace பாலாஜி சித்தப்பா” என தெரிவித்துள்ளார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கலக்கிய நடிகை மாளவிகா மோகனன் Viral Photos..

More in Cinema News

To Top