Connect with us

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு, சூர்ய குமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு..!!

CWC23

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு, சூர்ய குமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு..!!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு, சூர்ய குமார் யாதவ் தலைமையில் செயல்பட இருக்கும் இந்திய அணியின் பெயர்பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்தியவில் நடைபெறும் இந்த தொடர் நவம்பர் 23ம் தேதி தொடங்கி டிசம்பர் 3ம் தேதி வரை விசாக், திருவனந்தபுரம், கவுகாத்தி, ராய்பூர், பெங்களூரு நகரங்களில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டி20 தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது .

சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி : சூர்யகுமார் (கேப்டன்), ருதுராஜ் (து.கேப்டன்), இஷான் கிஷான், ஜெய்ஷ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ், சுந்தர், அக்ஸர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப், ப்ரஷித், ஆவேஷ் கான், முகேஷ் குமார் . கடைசி 2 போட்டிகளில் மட்டும் ஷ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக செயல்படுவார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக முதலில் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் உலக்கோப்பை தொடரின்போது ஹார்டிக் பாண்டியாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்ட காரணத்தினால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய ஹார்டிக் பாண்டியா தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் இருந்து விலகி உள்ளார்.

இந்நிலையில் ஹார்டிக் பாண்டியாவுக்கு மாற்று வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் சூர்யகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். உலகோப்பையை நழுவ விட்டபின் இந்திய அணி எதிர்கொள்ள போகும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சொந்த மண்ணில் ஜொலிக்குமா DC..? டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச முடிவு..!!!

More in CWC23

To Top