Connect with us

“ICC WC 2023 Finals: IND v AUS – ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்கள் இலக்கை!!”

CWC23

“ICC WC 2023 Finals: IND v AUS – ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்கள் இலக்கை!!”

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 54 ரன்கள் எடுத்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார். அதனால் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானமே மொத்தமாக அமைதியானது. கம்மின்ஸ் அவரது விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய சொல்லி பணித்தது. கில், 4 ரன்களில் வெளியேறினார். ரோகித் ஷர்மா, 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ஸ்ரேயஸ் ஐயர், 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 81 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாறியது.

இக்கட்டான அந்த தருணத்தில் இருந்து அணியை மீட்கும் கூட்டணியை அமைத்தனர் கோலி மற்றும் கே.எல்.ராகுல். இருவரும் 109 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தனர். அதே நேரத்தல் அரை சதம் கடந்த நிலையில் சிறப்பாக ஆடி வந்தார் கோலி. இந்தச் சூழலில் 29-வது ஓவரை ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை டிஃபன்ஸ் ஆட முயன்று இன்சைட் எட்ஜ் முறையில் போல்ட் ஆனார்.

அப்போது தான் விக்கெட் இழந்த முறையை பார்த்து கோலி அப்படியே சில நொடிகள் திகைத்து நின்றார். 63 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். பின் கே எல் ராகுல் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் சடசடவென விக்கெட்டுகள் விழுந்தன. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேப்டன் நினைவிடத்தில் உதவி கேட்ட தாய் - கையில் இருந்த பணத்தை அப்படியே கொடுத்த kpy பாலா

More in CWC23

To Top