Connect with us

நடிகர் சங்க கட்டடப் பணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதி உதவி..!!!

Cinema News

நடிகர் சங்க கட்டடப் பணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதி உதவி..!!!

நெடு நீண்ட காலமாக கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப் பணிக்காக நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் நிதி வழங்கி உள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தக் கட்டடம் வேண்டும் என்பதற்காக நடிகர் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில், நடிகர் சங்க கட்டடப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வைப்பு நிதிக்காக, தனது சொந்த நிதியிலிருந்து, ரூ.50 லட்சத்திற்கான காசோலையை நடிகர் சங்க நிர்வாகிகளிடம் இன்று நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் வழங்கியுள்ளார் .

தமிழ்நாட்டு திரைக் கலைஞர்களின் பல நாள் ஏக்கமாக உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப்பணியை விரைந்து நிறைவு செய்ய திரை பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிதியினை தொடர்ந்து வழங்கி வரும் நிலையில் தற்போது நடிகர் சங்க கட்டடப் பணி வேகமெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன் நடிகரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் , உலகநாயகன் கமல்ஹாசன் என பலரும் கோடிக்கணக்கில் நிதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்த முறையும் தமிழர்கள் இல்லை - ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top