Connect with us

“தீபாவளி முடிந்து சென்னைக்கு திரும்பும் மக்கள்” படையெடுக்கும் வாகனங்களால் திக்குமுக்காடும் சென்னை மாநகரம்..!!

Featured

“தீபாவளி முடிந்து சென்னைக்கு திரும்பும் மக்கள்” படையெடுக்கும் வாகனங்களால் திக்குமுக்காடும் சென்னை மாநகரம்..!!

தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறை முடிந்ததால், மீண்டும் சென்னை நோக்கி படை எடுக்கும் மக்களால் சென்னை மாநகரம் தற்போது படையெடுக்கும் வாகனங்களால் திக்குமுக்காடி வருகிறது.

ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் 12 ஆம் தேதி நேற்று கோலாகலமாக கொண்டாடபட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்று பாரபட்சமின்றி பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் இன்றோடு தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறை முடியவுள்ளதால் நாளை பள்ளி ,கல்லூரிகளுக்கும், பணிக்கு செல்வத்துக்கும் பொதுமக்கள் அனைவரும் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.

மக்கள் கூட்டம் இல்லாமல் கடந்த 3 நாட்கள் நிம்மதியாக இருந்த சென்னை மாநகரம் தற்போது படையெடுக்கும் வாகனங்களால் திக்குமுக்காடி வருகிறது.

அந்தவகையில் சென்னைக்கு செல்லும் மக்களால் விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

இதையடுத்து உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை கடந்து நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி அணிவகுத்து செல்கின்றன. ஏற்கனவே அதிக பட்டாசுகள் வெடித்ததால் வான் எங்கும் புகைமண்டலமாக இருக்க தற்போது படையெடுத்து நிற்கும் வாகனங்களால் மேலும் புகை வெளியேற காற்று மாசுவின் அளவும் மெம்மேலும் அதிகரித்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் சங்க கட்டடப் பணிக்கு நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி..!!!

More in Featured

To Top