Connect with us

விராட் கோலி, முகமது ஷமிக்கு இடமில்லை.. INDvsENG கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

INDvsENG Test India Squad

Sports

விராட் கோலி, முகமது ஷமிக்கு இடமில்லை.. INDvsENG கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை இன்று அறிவித்தது.

நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் கே.எல் ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விசாகப்பட்டினம் டெஸ்டில் இருந்து விலகிய நிலையில், தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். எனினும் அவர்கள் இருவரும் பங்கேற்பது மருத்துவ உடற்தகுதியைப் பொறுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, விராட் கோலி மற்றும் முகமது ஷமி போன்றவர்கள் வெவ்வேறு தனிப்பட்ட காரணங்களால் அணியில் இடம்பெறவில்லை. மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இரண்டு போட்டிகளிலும் மோசமாக விளையாடிய நிலையில், கடைசி மூன்று போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் ரஜத் படிதார் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகிய இருவரும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்ப்ரீத் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஐபிஎல்-ல் வரலாற்று சாதனை படைத்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்..!!!

More in Sports

To Top