Connect with us

“ஆஸ்திரேலிய அணி என்னை ஏமாற்றிவிட்டது” – வேதனை தெரிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின்

CWC23

“ஆஸ்திரேலிய அணி என்னை ஏமாற்றிவிட்டது” – வேதனை தெரிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின்

உலககோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 6 வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில் கோடிக்கணக்கான ரசிகர்களும் இந்திய வீரர்களும் பெயரம் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் .

இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து வேதனை தெரிவித்துள்ள இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது :

ஆஸ்திரேலிய அணி டாஸில் என்னை ஏமாற்றிவிட்டது. இன்னிங்ஸின் இடையே ஜார்ஜ் பெய்லியிடம் நான் பேசும்போது, நீங்கள் ஏன் எப்போதும் போல் முதலில் பேட்டிங் செய்யவில்லை எனக் கேட்டேன். அதற்கு அவர், ‘நாங்கள் இங்கு ஐபிஎல் உள்ளிட்ட நிறைய போட்டிகளை ஆடியிருக்கிறோம்.

சிவப்பு மண் சிதைய அதிக வாய்ப்புள்ளது. ஆனால் கருப்பு மண் அப்படி இல்லை. பகலில் பேட் செய்ய கருப்பு மண்தான் உகந்தது. சிவப்பு மண்ணில் பனியின் தாக்கம் இருக்காது. ஆனால், கருப்பு மண் பகலில் மாறலாம். அதுவே பின் இரவு நேரத்தில் கான்க்ரீட் போல மாறும்’ எனக் கூறினார்.

இந்திய பிட்ச்களை இவ்வளவு துல்லியமாக புரிந்து வைத்துள்ளதை பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in CWC23

Advertisement
 

Trending

 
Advertisement
To Top