Connect with us

50 ஓவர் உலக கோப்பையை 6வது முறையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி..!!

CWC23

50 ஓவர் உலக கோப்பையை 6வது முறையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி..!!

இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலககோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று கோலாகலமாக நடைபெற்றது . உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஏரளாமான ரசிகர்களுடன் இப்போட்டி விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார் . அதன்படி அஸ்சி அணிக்கு எதிராக கடினமான இலக்கை வைக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

இந்த போட்டியில் வழக்கம் போல் நல்ல தொடக்கத்தை கொடுத்த கேப்டன் ரோஹித் 47 ரன்களில் ஆட்டமிழக்க , கில்லும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

பின்னர் ஷ்ரேயஸ் ஐயரும் வந்த வேகத்தில் நடையை கட்டினார். நிலைத்து நின்று ஆடிய கோலி அரை சதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்ததால் மைதானமே சிறிது நேரம் அமைதியானது.பின்னர் வந்த கே எல் ராகுல் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் .இதையடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சடசடவென ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா விளையாடியது. வழக்கம் போல் டேவிட் வார்னர் மற்றும் ஹெட் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர்.

சிறப்பாக ஆட்டத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வார்னர் இருந்தும் ஷமி வீசிய பந்தில் ஓவரில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து பும்ரா வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் மார்ஷ் மற்றும் ஸ்மித் ஆட்டமிழந்தனர். 47 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து ஆஸ்திரேலியா அணி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது .

இருப்பினும் தன்னம்பிக்கையுடன் விளையாடிய ஹெட் மற்றும் லபுஷேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பெரும் சவாலாக அமைந்தனர் . அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க . மறுபக்கம் லபுஷேன் அரை சதம் கடந்து அசத்தினார் .

பின்னர் 43 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 241 ரன்கள் என்ற இலக்கை எட்டியது ஆஸ்திரேலியா அணி . இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இந்திய மண்ணில் இந்திய அணியை அபாரமாக வீழ்த்தி உள்ளது.

More in CWC23

To Top