Connect with us

அருவருக்கத்தக்க மெசேஜ்கள் அனுப்பும் இந்திய ரசிகர்கள் – க்ளென் மேக்ஸ்வெல்லின் மனைவி பகிரங்க குற்றச்சாட்டு..!!

CWC23

அருவருக்கத்தக்க மெசேஜ்கள் அனுப்பும் இந்திய ரசிகர்கள் – க்ளென் மேக்ஸ்வெல்லின் மனைவி பகிரங்க குற்றச்சாட்டு..!!

உலககோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த இந்திய ரசிகர்கள் என்மேல் கோபம் கொண்டு எனக்கு அருவருக்கத்தக்க மெசேஜ்களை அனுப்பிவருவதாக ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லின் மனைவியும் ஆஸ்திரேலியா வாழ் இந்தியரான வினி ராமன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஏரளாமான ரசிகர்களுடன் நேற்று விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்றது.

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சற்று மந்தமாக ஆடியதால் 240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது . இதையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அபாரமாக ஆடி 6 வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி எதிர்கொண்ட அனைத்து போட்டிகளிலும் அபரா வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் நிச்சயம் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்ட வசமாக இந்திய அணி தோல்வியை சந்தித்தது யாரெல்லாம் தற்போது வரை ஜீரணிக்கமுடியவில்லை . இதனால் கோபமடைந்து ரசிகரக்ள் இந்திய அணியையும் ஆஸ்திரேலியா அணியையும் வசைபாடி வருகின்றனர்.

அந்தவகையில் இந்திய அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்ளமுடியாத இந்திய ரசிகர்கள் என்மேல் கோபம் கொண்டு எனக்கு அருவருக்கத்தக்க மெசேஜ்களை அனுப்பிவருவதாக ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லின் மனைவியும் ஆஸ்திரேலியா வாழ் இந்தியரான வினி ராமன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்ற நிலையில், தனக்கு அருவருக்கத்தக்க மெசேஜ்களை இந்திய ரசிகர்கள் அனுப்புவதாக வேதனை தெரிவித்துள்ள வினி ராமன் நான் பிறந்து, வளர்ந்த, என் கணவர் விளையாடும் ஆஸ்திரேலியாவை ஆதரித்துக்கொண்டு, அதே சமயம் இந்தியராகவும் இருக்கலாம் என்பதை மெசேஜ் அனுப்புபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் வினி ராமன் புத்திமதி கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  போக்சோ வழக்கில் கைதான நடன இயக்குநர் ஜானிக்கு இடைக்கால ஜாமின்..!!

More in CWC23

To Top