Connect with us

“HBD Kamal: இத்தனைவித டெக்னாலஜியை தமிழ் சினிமாவிற்குள் கொண்டுவந்தது நடிகர் கமல்ஹாசன் தான்!”

Cinema News

“HBD Kamal: இத்தனைவித டெக்னாலஜியை தமிழ் சினிமாவிற்குள் கொண்டுவந்தது நடிகர் கமல்ஹாசன் தான்!”

தமிழ் சினிமாவில் சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தை ஒரு ரூபாய் கூட வீணாக்காமல் சொத்துக்களாகவோ, பிசினஸாகவோ மாற்றும் நடிகர்கள் மத்தியில் கமல்ஹாசன், சினிமாவில் சம்பாதித்த பணத்தை, தனது சொந்த செலவில் படமெடுத்து புதிய தொழில் நுட்பங்களை அதில் புகுத்தியவர். தமிழ் சினிமாவுக்கு கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்களை நினைவுகூர்வதே இன்றைய அவரது பிறந்தநாளுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் எனக்கூட வைத்துக்கொள்வோம்.

விக்ரம்:

1986ஆம் ஆண்டு, ராஜசேகர் இயக்கத்தில் உருவான விக்ரம், தமிழ் சினிமாவின் முதல் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் கம்பியூட்டர் கொண்டு ரெக்கார்டிங் செய்யப்பட்டது. இப்படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மூலம் தயாரித்திருந்தார், கமல்ஹாசன்.

குணா:

1990ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் தான், ஸ்டேடி கேம் என்னும் ஸ்டேடி கேமரா தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இப்படத்தை கமலின் நண்பர் சந்தானபாரதி இயக்க, இப்படத்தையும் புரொடியூஸ் செய்தவர், கமல்ஹாசன் தான்.

தேவர் மகன்:

1992ஆம் ஆண்டு, கமல்ஹாசன் தயாரித்து நடித்து வெளியான படம் தான், தேவர் மகன். இப்படத்தின் கதை, திரைக்கதையை கமல்ஹாசன் ‘மூவி மேஜிக் – Movie Magic’ என்னும் சாஃப்ட்வேரை கற்று, அதில் ஏழு நாட்களுக்குள் எழுதி முடித்தார்.

மகாநதி:

1994ஆம் ஆண்டு கமல் கதை, திரைக்கதை எழுதி வெளிவந்த மகாநதி படத்தில், முதன்முறையாக ஆவிட் என்னும் எடிட்டிங் சாஃப்ட்வேர் பயன்படுத்தப்பட்டது. அதை பரிந்துரைத்தது கமல்ஹாசன் தான்.

குருதிப்புனல்:

1995ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த முக்கியமான படம், குருதிப்புனல். இப்படத்தையும் தனது சொந்த செலவில் தயாரித்த கமல்ஹாசன், Dolby Atmos என்னும் ஆடியோ சிஸ்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்தியன்:

இந்தியன் 1996ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ஆகும். இப்படத்தில் வயதான கமல்ஹாசனாக மாற, கிரேஸ்தடிக் மேக்கப் என்னும் நுட்பத்தை பயன்படுத்தி, அதனை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார், கமல்ஹாசன்.

ஆளவந்தான்:

2001ஆம் ஆண்டு வெளியான ஆளவந்தான் படத்தில், மோஷன் கிராஃபிக்ஸ் சண்டைக்காட்சிக்குப் பயன்படுத்தியுள்ளனர்.

விருமாண்டி:

இப்படம் 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இப்படத்தையும் தனது சொந்த பேனரில் தயாரித்து இயக்கி நடித்தார், கமல்ஹாசன். இப்படம் முழுக்க முழுக்க லைவ் ரெக்கார்டிங்கில் எடுக்கப்பட்டதாம். இதற்குப் படப்பிடிப்புத்தளத்தில் நுயுண்டோ என்னும் மிஷின் வைக்கப்பட்டிருந்தது.

மும்பை எக்ஸ்பிரஸ்:

2005ஆம் ஆண்டு, கமல்ஹாசன் தயாரித்து நடித்து வெளியான படம், மும்பை எக்ஸ்பிரஸ். இப்படத்தில்தான் முதன்முறையாக தமிழ் சினிமாவிலேயே முதல்முறையாக டிஜிட்டல் கேமரா பயன்படுத்தப்பட்டது. ஆகையால், அந்த காலகட்டத்தில் பிலிம்ரோல்களில் படம் பார்த்த ரசிகர்களால், அப்படத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதனால்,அப்படம் ஆவரேஜான வெற்றியையே பெற்றது.

See also  கைகொடுக்காத சாஞ்சு சாம்சனின் அதிரடி - டெல்லியிடம் போராடி வீழ்ந்தது ராஜஸ்தான்..!!

விஸ்வரூபம்:

இப்படமானது 2013ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் ஆரோ 3டி (auro 3d) சவுண்ட் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top