Connect with us

கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது – வீரநடை போட்டு விருதை பெற்ற பிரேமலதா விஜயகாந்த்..!!

Cinema News

கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது – வீரநடை போட்டு விருதை பெற்ற பிரேமலதா விஜயகாந்த்..!!

மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

மத்திய அரசால் ஆண்டு தோறும் வழங்கப்படும் நாட்டின் மிக உயரிய விருதுகளுக்கு இம்முறை தமிழ்நாட்டை சேர்ந்த ஜாம்பவான்கள் தேர்வாகி இருந்தனர் அதில் மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்தும் ஒருவர்.

கேப்டனின் மறைவகுக்கு பின் மத்திய அரசு இந்த உயரிய விருதை அறிவித்தது சற்று வருத்தமாக இருந்தாலும் இந்த உன்னத மனிதருக்கு இந்த விருது உரியது தான் என பலரும் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர் .

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் வீரநடை போட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

இந்த விருது வழங்கும் விழாவில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர், தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராகுல்காந்தியோடு நேருக்கு நேர் விவாதிக்க அஞ்சும் பிரதமர் மோடி - செல்வப்பெருந்தகை சாடல்..!!

More in Cinema News

To Top