Connect with us

சூரியின் கருடன் பட ரிலீஸ் குறித்து வெளியான டக்கர் அப்டேட்..!!

Cinema News

சூரியின் கருடன் பட ரிலீஸ் குறித்து வெளியான டக்கர் அப்டேட்..!!

சூரி நடிப்பில் உருவாகி உள்ள கருடன் படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு சிறப்பான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கால் பதித்து இன்று கதையின் நாயகனாக தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் தான் நடிகர் சூரி.

இவரது நடிப்பில் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான விடுதலை படம் சூரியின் நடிப்பு திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்நிலையில் இவரது நடப்பில் தற்போது இரு புதிய படம் உருவாகி உள்ளது. சூரி நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு கருடன் என பெயரிடப்பட்டுள்ளது .

நடிகரும் இயக்குநருமான சசிகுமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் சமுத்திர கனி,உன்னிமுகுந்தன் ரேவதி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர்.

வெற்றிமாறனின் கதையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் ரிலீஸுக்கு தேவையான அனைத்து பணிகளும் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன .

இந்நிலையில் இப்படம் குறித்த அடுத்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி திட்டத்தட்ட 90 சதவீதம் ரிலீஸுக்கு தயாரிக்கியுள்ள இப்படம் இந்த மாதமே திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆரியின் ‘Fourth Floor’ OTT-யில் வெடித்த சாதனை – 20 மில்லியன் நிமிடங்களை கடந்த திரில்லர்!

More in Cinema News

To Top