Connect with us

தரமான சம்பவம் Loading – விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது..!!

Cinema News

தரமான சம்பவம் Loading – விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது..!!

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகும் வீர தீர சூரன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சீயான் விக்ரம் . இவரது நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாக உள்ள திரைப்படம் தான் ‘சீயான் 62’ .

இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ‘சீயான்’ விக்ரமுடன் சேர்ந்து , துஷார விஜயன் , எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர் .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படத்தின் டைட்டில் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது .

அதன்படி வீர தீர சூரன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மீது ஏகபோக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது .

முதல் போஸ்டரில் விக்ரம் கத்தி மற்றும் அருவாள் உடன் இருப்பது போன்ற போஸ்டர் வெளியாகி பார்க்கவே செம கோரமாக இருந்தது . இந்நிலையில் தற்போது இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்ட்டரில் ஒரு மளிகை கடைக்காரர் தனது மனைவியுடன் எக்ஸல் வண்டியில் செல்வதுபோல் உள்ளது அதுமட்டுமின்றி இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், ‘சம்பவம் Loading’ எனவும் குறிப்பிட்டு நடிகர் விக்ரம் இந்த போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  1000 கோடியை கடந்து வசூல் வேட்டை நடந்தும் பிரபாஸின் கல்கி 2898 AD - அதிகாரப்பூர்வ வசூல் விவரம் இதோ..!!

More in Cinema News

To Top