Connect with us

கவினின் ‘ஸ்டார்’ படத்தை தாறுமாறாக புகழ்ந்த இயக்குநர் நெல்சன்..!!

Cinema News

கவினின் ‘ஸ்டார்’ படத்தை தாறுமாறாக புகழ்ந்த இயக்குநர் நெல்சன்..!!

கவின் நடிப்பில் திரையரங்குளில் இன்று கோலாகலமாக வெளியாகி உள்ள ‘ஸ்டார்’ படத்தை இயக்குநர் நெல்சன் தாறுமாறாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இயக்குநர் இலன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவான படம் தான் ஸ்டார் . ஹரிஷ் கல்யாண் நடிக்க ஐயூர்ந்த இந்த படம் சிலபல காரணங்களால் கவின் கைக்கு வர எந்த வித தட்டுதடுங்களும் இன்றி சிறப்பான உருவானது.

கவின் , இலன் , யுவன் சங்கர் ராஜா காம்போவில் சிறப்பாக தரமாக உருவான இப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படமும் நல்ல பல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஸ்டார் படத்தை இன்று திரையரங்குகளில் பார்த்த பல பிரபலங்கள் கவின் மற்றும் படக்குழுவை பாராட்டி வரும் நிலையில் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் ஸ்டார் படத்தையும் படகுக்குழுவையும் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் நெல்சன் கூறியதாவது :

ஸ்டார் திரைப்படம் மிகவும் நன்றாக உள்ளது. நிறைய இடங்களில் ரொம்பவே எமோஷனலாக இருந்தது . இயக்குநர் இளன் சிறப்பாக எழுதியுள்ளார். கவின் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். திரையில் பயங்கரமாக மிரட்டியுள்ளார். யுவன் சங்கர் ராஜா மிகவும் அற்புதமாக இசையமைத்துள்ளார். படக்குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் படம் நிச்சயம் பிளாக் பஸ்டர் ஹிட் என இயக்குநர் நெல்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புஷ்பா பாடலுக்கு சமந்தாவை விட மிரட்டலாக ஆடிய மீனா - வைரல் வீடியோ..!!

More in Cinema News

To Top