Connect with us

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் முதல் பாடலை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் முதல் பாடலை வெளியிட்டது படக்குழு..!!

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் முதல் சிங்கள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தனது 50 ஆவது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியான நாள் முதல் இப்படம் குறித்து அவரது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது .

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது .

இப்படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் , செல்வராகவன் , எஸ்.ஜே.சூர்யா,அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது ராயன் படக்குழு ஒரு சிறப்பான அப்டேட்டை வெளியிட்டுள்ளது .

அதன்படி தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’ படத்தின் முதல் சிங்கள் பாடலான அடங்காத அசுரன் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வானம் இடி முழங்க பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top