Connect with us

அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் – எப்போ ரிலீஸ் தெரியுமா..?

Cinema News

அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் – எப்போ ரிலீஸ் தெரியுமா..?

சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ படத்தின் ரிலீஸ் தேதி சில பல காரணங்களால் மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் தான் சுந்தர்.சி . இவரது இயக்கத்தில் இதுவரை எத்தனையோ படங்கள் வெளியாகி இருந்தாலும் இவர் இயக்கி நடித்த அரண்மனை படத்தின் அணைத்து பாகங்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்தவகையில் இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள அரண்மனை 4 படத்தின் மீது ஏகபோக எதிர்பரப்பு நிலவி வருகிறது.

சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் அந்த ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்படம் மே 3 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

படத்தின் கிராபிக்ஸ் மற்றும் எடிட்டிங் பணிகளில் இன்னும் சில நேரம் தேவைப்படும் என்பதால் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உறியடி விஜய் குமார் நடித்துள்ள ‘எலக்சன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

More in Cinema News

To Top