Connect with us

மக்கள் கொண்டாடும் படமாக மாறிய ஸ்டார் – நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இயக்குநர் இளன்..!!

Cinema News

மக்கள் கொண்டாடும் படமாக மாறிய ஸ்டார் – நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இயக்குநர் இளன்..!!

கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் வெற்றிநடைப் போட்டு வரும் நிலையில் அப்படத்தின் இயக்குநர் இளன் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மனதார நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பியர் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் இளன் . இவரது இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவான திரைப்படம் ஸ்டார் .

ஹரிஷ் கல்யாண் நடிக்க இருந்த இந்த படம் சில பல காரணங்களால் கவின் கைக்கு வர எந்த வித தட்டுதடுங்களும் இன்றி சிறப்பான வகையில் படம் உருவானது.

கவின் , இளன் , யுவன் சங்கர் ராஜா காம்போவில் சிறப்பாக உருவான இப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்து வரும் நிலையில் தற்போது இயக்குநர் இளன் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மனதார நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

முதல் நாள் காட்சியில், முகம் அறியா சகோதரன் ஒருவன் ஓடி வந்து கேட்டான் : உங்கள கட்டி புடிச்சுக்கலாமா? அந்த இரு கணம் அன்பு மட்டுமே வெளிப்பட்டது.

ஓர் கணவனும் மனைவியும், திரையரங்கை விட்டு விலகவே இல்லை . தேம்பி தேம்பி அழுததால் , நானும் அழுதேன். அந்த கண்ணீரும் அன்பே.

திரையரங்கை சுத்தம் செய்யும் பணி பெண், கன்னத்தை பிடித்து சுத்திப்போட்டது என் தாயின் அன்பை வெளிப்படுத்தியது.

” பல இடங்களில் கைதட்டலும், கரகோஷமும் “லவ் யூ” என்று சொல்வதாகவே தோன்றியது. இறுதிக்காட்சியின் வரவேற்பு என்னுள் உள்ள எழுத்தாளனை இன்னும் தைரியசாலியாக மாற்றியுள்ளது.

ரோலிங் கிரெடிட்ஸ் போட்டவுடன் எழுந்து செல்வதே வழக்கம். ஆனால் நான் கண்டதோ காதலியை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாத காதலர்களைதான்.

ஒரு சில விமர்சனங்கள், நான் ஒரு கலைஞனாய் மெருகேற உதவுகிறது. நம்பிக்கைக்கு நன்றி. கூட்டம அலைமோதுகிறது. பகலிலும், மதியத்திலும், இரவிலும் சிலரின் கனவிலும் ஸ்டார் ஒளிர்கிறது என இயக்குநர் இளன் மனதார நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ப்ரீ புக்கிங்கில் சம்பவம் செய்யும் ராயன் - இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

More in Cinema News

To Top