Connect with us

நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 300 நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்த கார்த்தியின் ரசிகர்கள் முடிவு..!!

Cinema News

நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 300 நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்த கார்த்தியின் ரசிகர்கள் முடிவு..!!

நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 300 நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்த கார்த்தியின் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி . இவரின் நடிப்புக்கும் நல்ல குணத்திற்கும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 300 நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்த கார்த்தியின் ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

முதலாவதாக சென்னையில் உள்ள வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் நீர் மோர் வழங்குதல், முதியோர் இல்லத்தில் அன்னதானம், குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம் ஆகியவை வழங்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மே 19, மே 26 ஆகிய நாட்களில் அன்னதானம், நீர்மோர் வழங்குதல், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல், மரக்கன்றுகள் வழங்குதல், விதைப்பந்துகள் வழங்குதல், ஆதரவற்றவர்களுக்கு உதவுதல், கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

குறிப்பாக மே 25ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரத்த தானம் மற்றும் உடல் தானம் செய்ய இருக்கிறார்கள். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ரத்த தானம் வழங்கவுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்திய தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்றது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்..!!

More in Cinema News

To Top