Connect with us

‘வேட்டையன்’ படத்தில் தனது பகுதியை நிறைவு செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!!

Cinema News

‘வேட்டையன்’ படத்தில் தனது பகுதியை நிறைவு செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேற லெவலில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தில் சூப்பர் ஸ்டாருக்கான படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தான் வேட்டையன் . இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து கேரளா சினிமாவின் ராக்ஸ்டார் ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர்.

இசையுலகின் ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கிறது.

ரசிகர்கள் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் தற்போது இப்படத்தின் குட்டி அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

அதன்படி த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்திற்கான படப்பிடிப்புக் காட்சிகள் நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்களும் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வேகமெடுக்கும் படப்பிடிப்பு - SK 23 படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ..!!

More in Cinema News

To Top